புதிய தொடக்கம்


வாழ்க தமிழ்!  வெல்க தமிழ்

வணக்கம்!

அனைத்துத் தமிழ் நெஞ்சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகட்டும்.

வலைத்தளங்களில் உலாவுகையில் சொடுக்கியின் (Mouse) சொடுக்கலின் (click) மூலம் வரவினைப் பெற்று வளமாக வாழ சில ஆலோசனைகளையும், ஆரம்பத்தினையும் தமிழ் மூலம் வழங்குவதற்காய் இதனை ஆரம்பிக்கின்றேன்.

தமிழர் தம் பேராதரவை எதிர்பார்த்து ஆரம்பிக்கும் இவ்வலைப் பூவினைக் காணுகின்ற அனைவரும் இன்னும் பல தமிழ் நெஞ்சங்களுக்கு  (தயவு செய்து இன்னும் ஒருவருக்காவது) இதனைத் தரிசிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து, தமிழன் ஒற்றுமையாய் வாழத்தெரியாதவன், அடுத்தவன் முன்னேற்றத்தைப் பொறுக்காதவன் (அனைவரும் அறிந்த  தமிழ் நண்டு கதை - இன்னுமொரு பூவில் மலரும்) போன்ற இழி சொற்களை இல்லாதொழிப்போம் என்ற வேண்டுகோளுடன் உண்மைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும், தமிழ் (பேசும்) வாசிக்கத் தெரிந்தவர்களுக்கும் (ஆதங்கம்) இப்பூவினைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

நன்றி
வணக்கம்