வெள்ளி, 6 மே, 2011

சிறு துளி, பெரு வெள்ளம்!

ஆம்.

சிறு தூறலாய்த் துளிகளாய் ஆரம்பிக்கும் மழையே, அடை மழையாகிப் பெரு வெள்ளத்தினை ஏற்படுத்துகின்றது.

இணையத் தளங்களின் மூலமாக பணம் பெறுவது
என்பதுவும் மிகவும் சிறிதாக ஆரம்பித்து - (ஆரம்ப கட்டத்தில் எமது நேரத்தில் சிறிதளவை அதற்கென ஒதுக்கிச் சரியான திட்டமிடலுடனும், *வழிகாட்டலுடனும்) காலப்போக்கில் பேரளவு வருமானத்தை ஈட்டலாம். (பிழையான வழிகாட்டல்களால் பணத்தை இழந்தவர்கள் அதிகம்)

தற்போது பலர் தமக்கென கணினிகளையும் இணைய இணைப்புகளையும் கொண்டிருந்தபோதிலும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி என்பது தெரியாமல் இருக்கின்றனர்.  சிலர் இது குறித்து அறிந்திருந்தபோதிலும் ஆரம்பிப்பது எப்படி என்பது தெரியாமல் இருக்கின்றனர் - ஆரம்பித்துக் கைவிட்டவர்களும் உள்ளனர்.  மேலும் குறிப்பிட்ட சிலர் இதன் மூலம் வருமானத்தினைப் பெற்றுக்கொண்டபோதிலும் அதனை வியாபிக்க(அதிகரிக்க) வழி தெரியாமல் உள்ளனர்.


இக் குறைகளைக் களையுமுகமாக எனது இவ்வலைப்பூவினை தருவதற்கு எண்ணியுள்ளேன்.

முதற்கட்டமாக, வலைத்தளங்களில் நடக்கின்ற தகிடுதத்தங்கள், ஏமாற்று வேலைகள் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.  நீங்கள் ஏமாறாது இருக்க குறித்த சில குறிப்புகள் வருமாறு:


  • எந்த சந்தர்ப்பத்திலும் கிரடிட் கார்ட் இலக்கங்களை உள்ளீடு செய்யாதீர்கள்.
  • முகமோ, முகவரியோ தெரியாத இடத்தில் முதலீடு செய்ய முயலாதீர்கள்.
  • வங்கிக் கணக்கு இலக்கங்களை உள்ளீடு செய்யாதீர்கள்.
  • ஒவ்வொரு தனிப்பட்ட தேவைக்கும் வெவ்வேறு (தனித்தனி) இலத்திரனியல் கடித (email) முகவரிகளை ஏற்படுத்தி வைத்திருங்கள்.
  • உங்களின் கடவுச்சொற்களை (Passwords) மிகவும் பாதுகாப்பாகவும் மறந்துவிடாமலும் வைத்திருங்கள்.
  • ஒரே கடவுச்சொல்லை எல்லாவற்றிற்கும் உபயோகிப்பதைத் தவிருங்கள்.
  • வலிதான கடவுச்சொற்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • தங்களுக்கேயான தனிப்பட்ட கணினிகளை வைத்திருப்பவர்கள் மட்டும் அதில் கடவுச்சொற்களுக்கான நிரல் ஒன்றினை சேமித்து வைத்திருக்கலாம். 
  • அனைவரும் கடவுச்சொற்களுக்கான நிரல் ஒன்றினைத் தயாரித்து அதனை இலத்திரனியல் தபால் (email) மூலமாகத் தமக்கே அனுப்பி வைத்துக்கொள்ளலாம்.
ஏமாறுபவர்கள் உள்ளவரையில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் இந்த உலகில். மேலும் சில உபயோகமான குறிப்புக்களுடன் அடுத்த பூ மலரும்.

2 கருத்துகள்:

  1. அன்பு நன்பரே,தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    சொல் சரிபார்ப்பு ஆப்ஷனை நீக்கிவிடுங்கள்.அது பின்னுட்டமிடுபவர்களுக்கு சலிப்பினை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி!

    (ஆப்ஷனுக்கு செல்லும் வழியினையும் கூறினால் நன்றாக இருக்கும் - தேடிச் செய்ய அதிக நேரமெடுக்குமென்பதால்.)

    பதிலளிநீக்கு